கும்மிடிப்பூண்டி: அதிமுக 54 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

 


அதிமுக கட்சி துவக்கப்பட்ட 54 ஆம் ஆண்டு விழாவையொட்டி கும்மிடிப்பூண்டி நகர அதிமுக சார்பில் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதிகளில் உள்ள எம்ஜிஆர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. 

கும்மிடிப்பூண்டி நகர அதிமுக செயலாளரும் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கவுன்சிலருமான எஸ்.டி.டி.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சிறுபான்மை அணி மாவட்ட செயலாளர் சிராஜூதின், அதிமுக நகர நிர்வாகிகள் முன்னாள் நகரக் கழக துணை செயலாளர் எம் கே எஸ் சரவணன். எம்.எ மோகன் பாசறை., சரவணன், கென்னடி அப்பு, மஜீத் பாய் சுந்தர்ராஜ். மற்றும் நிர்வாகிகள் மகளிர் அணியினர் சுசீலா விஜயாஉடனிருந்தனர்.




Post a Comment

0 Comments