ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. திண்டுக்கல்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்த மலைப்பாதை அமைந்திருக்கிறது. தமிழகம் மற்றும் கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய பாதையாக இந்த மலைப்பாதை உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த மலைப்பாதை வழியாக அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும், பழுதாகி நிற்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இதனால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு என்பது வாடிக்கையான நிகழ்வுகளாக மாறிவிட்டன.இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவைக்கு கன்டெய்னர் லாரி நேற்று சென்று கொண்டிருந்தது. காலை 8 மணி அளவில் 15-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது அங்குள்ள குறுகிய வளைவில் திரும்ப முடியாமல் நின்றுவிட்டது.இதனால் ரோட்டின் இருபுறபுமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு மதியம் 1 மணி அளவில் லாரி மீட்கப்பட்டது. இதைத்ெதாடர்ந்து போக்குவரத்து சீரானது. 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள், பஸ்களில் வந்த பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
0 Comments