குழந்தைகள் போலியோ வைரஸ் நோயால் பாதிக்கப்படாமல் இருக்க நாடு முழுவதும் அவ்வப்போது போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்திலும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. போலியோ வைரஸ் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, விருதுநகர்ம் ஆகிய 6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது.
5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
0 Comments