மீஞ்சூரை சேர்ந்த ரூபாராம் அறக்கட்டளைக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்


திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பாக தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர்.மு.பிரதாப் இரத்த தான முகாம் ஏற்பாட்டாளர்கள் 84 அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகளைப் பாராட்டி அவர்களை கௌரவிக்கும் விதமாக பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார். 

உடன் முதல்வர். அரசு மருத்துவ கல்லூரி (ம) மருத்துவமனை மரு.ஜே.ரேவதி, துணை இயக்குநர் (குடும்ப நலம்) மரு.பி.சேகர், மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாடு அலுவலர் (ம) மாவட்ட சுகாதார அலுவலர், திருவள்ளூர் மரு.பி.பிரியாராஜ். அரசு மருத்துவ கல்லூரி)மருத்துவமனை, திருவள்ளூர் மரு.செ சோகள்ராஜ்.மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு (ம) கட்டுபாடு அலகு மரு.பிரதிபா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திருமதி தி.சண்முகவல்லி,துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மீஞ்சூர் அடுத்த வல்லூரில் இயங்கிவரும் ரூபாராம் அறக்கட்டளை உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிநிகள் உள்ளனர்.

Post a Comment

0 Comments