சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறையின் கல்லூரிக் கலைத் திருவிழா


 ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்   கலையால் கல்வி செய்வோம் என்ற தலைப்பில் கல்லூரியின் முதல்வர் சிவக்குமார் தலைமையில் மாணவ, மாணவிகளுக்கு தற்காப்புக் கலைப் போட்டி, சைகை நாடகம், குழு நாடகம், வாத்திய இசை மற்றும் பொம்மலாட்டம் போன்ற போட்டிகளில் மாணவ மாணவியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். இப்போட்டிகளுக்கு தமிழ்ச்செம்மல் முத்துரத்தினம், தென்னவன், ராஜலட்சுமி, கவிதா ஈஸ்வரன் மற்றும் சரஸ்வதி ஆகியோர்கள் நடுவர்களாக கலந்து கொண்டு மேற்காணும் போட்டிகளில் பங்குபெற்ற மாணவ ,  மாணவிகளை தெரிவுசெய்தனர்.

மேற்காணும் போட்டிகளில் தற்காப்புக் கலைப் போட்டியில் பி.சபரி முதல் இடமும், மோனிஷா இரண்டாம் இடமும் , சைகை நாடகம் போட்டியில் லோகேஷ் குழு முதல் இடமும், பார்த்தசாரதி குழு இரண்டாம் இடமும், சிவகாமி குழு மூன்றாம் இடமும், குழு நாடகம் போட்டியில் அபர்ணா குழு முதலிடம், பத்மா  குழு இரண்டாமிடம், கோமதி குழு மூன்றாமிடம், வாத்திய இசை போட்டியில் கபீஸ் முதலிடம், பிரின்ஸ் இரண்டாமிடம், புவனேஸ்வரி மூன்றாமிடம், பொம்மலாட்டம் போட்டியில் சந்திரா குழு முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர்.இன்றைய கல்லூரிக் கலைத்திருவிழா போட்டிகளை தமிழ்த்துறை பேராசிரியர் எண்ணம் மங்கலம் பழநிசாமி ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.



Post a Comment

0 Comments