புன்செய் புளியம்பட்டியில் நகராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு திமுக நகர செயலாளர் பி.ஏ.சிதம்பரம் தீபாவளி பரிசு வழங்கினார்


ஈரோடு மாவட்டம் ,  புன்செய்ப் புளியம்பட்டியில் 4வது ஆண்டாக நகர திமுக சார்பில் தீப ஒளி திருநாளை முன்னிட்டு நகராட்சி பணியாளர்கள் ,  அலுவல் பணியாளர்கள்,  தூய்மை பணியாளர்கள், வாட்டர் போர்டு பணியாளர்கள், அனிமேட்டர்கள், DBC பணியாளர்கள், மின் பணியாளர்கள் என 125 பணியாளர்களுக்கு ரொக்கம், இனிப்புகள் மற்றும் பட்டாசு பெட்டிகள் அடங்கிய பரிசு பொருட்களை புஞ்சை புளியம்பட்டி திமுக நகர செயலாளரும், புஞ்சை புளியம்பட்டி நகரமன்ற துணை தலைவர்  பி.ஏ.சிதம்பரம்  வழங்கினார்.

இந்த நிகழ்வில் நகர திமுக அவைத்தலைவர்  சாகுல் அமீது , புஞ்சை புளியம்பட்டி நகர்மன்ற தலைவர் ஜனார்த்தனன் , மாநில, மாவட்ட, நகர கழக நிர்வாகிகளும், நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள்,  , இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, சார்பு அணியினரும், பொது மக்களும் கலந்துகொண்டனர்.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 , 6382211592 .





Post a Comment

0 Comments