கோபி ஊராட்சி ஒன்றியம் கே.மேட்டுபாளையம் பகுதியில் சமுதாய கூடத்தை திருப்பூர் எம்.பி சுப்பராயன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்


ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம் , கே. மேட்டுப்பாளையம் பகுதியில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கூடத்தை திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்  கே. சுப்பராயன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு  வடக்கு திமுக மாவட்ட  செயலாளர் என் .நல்லசிவம் , அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர்  அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட  செயலாளர்  சிவராஜ் ,காங்கிரஸ் கட்சியின் மாவட்ட  செயலாளர்  சரவணன் ,கோபிசெட்டிபாளையம் ஒன்றிய  செயலாளர்கள்  ரவீந்திரன் ,  சீனிவாசன்  மற்றும் திமுக நிர்வாகிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.



Post a Comment

0 Comments