திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட முக்கரம்பாக்கம், நெல்வாய்,ஆகிய ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முக்கரம்பாக்கம் பகுதியில் நடைபெற்றது.இந்த முகாமில் மகளிா் உரிமைத் தொகை, முதியோா் உதவித் தொகை,பிறப்புச் சான்றிதழ்,பட்டா பெயா் மாற்றம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்,உள்ளிட்ட 15 துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இலவச வீட்டு மனை பட்டா, மாற்றுத்திறனாளிக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதில் ஊராட்சி செயலாளர்கள் விஜயகுமார், ராம்குமார்,முன்னாள் திமுக கவுன்சிலர் ஜோதி,உள்ளிட்ட நிர்வாகிகள், விஜயகுமார் குணசேகரன் சேகர் பாஸ்கர் கோதண்டம். மணிகண்டன் ஜெகன் மகேந்திரன் ரமேஷ் நாயுடு விமல் ஜஸ்டின் கலாநிதி சதாசிவம் அஜித் பசுபதி மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் ஊராட்சி நிர்வாகிகள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 Comments