திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பழவேற்காடு, திருப்பாலைவனம்,மெதூர் உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் பூத் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் திண்ணை பிரச்சாரம் செய்வதற்கான பயிற்சி முகாம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுனியம் பலராமன் தலைமையில் திருப்பாலைவனத்தில் நடைபெற்றது.
தகவல் தொழில்நுட்பு பிரிவு நிர்வாகியும் பூத் கமிட்டி பொருப்பாளருமான சுந்தர் கலந்து கொண்டு பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார் இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, மாவட்ட துணை செயலாளர் சுமித்ரா குமார் உதயகுமார் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செவ்வழகி எர்ணாவூரான் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 Comments