ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்கத்தின் சார்பில் வணிகர் சங்க தலைவர் ஜவகர் தலைமையில் சத்தியமங்கலம் காவல் துறை காவல் ஆய்வாளர் ஜெகநாத்திடம் தீபாவளி பண்டிகை காலங்களில் போக்குவரத்து சீரமைப்பு குறித்து கோரிக்கை மனு வழங்கினார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் சத்தியமங்கலம் நகரத்திற்குள் சத்தியமங்கலம் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களில் இருந்து பொதுமக்கள் அதிக அளவில் வணிகம் செய்வதற்காக வருகை தருவார்கள், இதனால் வணிக நிறுவனங்களுக்கு வருவதற்கும், வணிகம் முடிந்து செல்வதற்கும் போக்குவரத்து சிரமங்கள் ஏற்படலாம். குறிப்பாக வடக்குபேட்டை, கடைவீதி, கோட்டுவீராம்பாளைம், எஸ் பி எஸ் பங்க் சுற்றுபுறம், பழைய, புதிய பஸ்நிலையம் போன்ற முக்கிய பகுதிகளில் சாதரணமாகவே நெரிசல் உருவாகிறது, அதனை காவல் துறை திறமையாக போக்குவரத்தை சீர்செய்து வருவதை அனைத்து வணிகர் சங்கம் மனமாரப் பாராட்டுகிறது.
ஆனால் பண்டிகை காலங்களில் முக்கிய இடங்களில் அதிகப்படியான நெரிசல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கூறிய முக்கிய இடங்களில் கூடுதல் காவலர்களை பணியமர்த்தி பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் எந்தவித இன்னல்களும் நடைபெறாதவாறு போக்குவரத்தையும் சீரமைத்து தருமாறு மனுவில் கூறியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் வணிகர் சங்க செயலாளர் சேவியர், வணிகர் சங்க பொருளாளர் ஜாகீர் உசேன், வணிகர் சங்க துணை தலைவர் நாகராஜ், வணிகர் சங்க துணை செயலாளர் ராம் குமார், வணிகர் சங்க துணை தலைவர்கள் தனசேகரன், சசிகுமார், வணிகர் சங்க துணை செயலாளர்கள் சீனிவாசன், சதீஷ் குமார், கமலக்கண்ணன், ராஜா மாதவன், செயற்குழு உறுப்பினர்கள் பாலச்சந்தர், சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
0 Comments