தீபாவளியை முன்னிட்டு சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு பலகாரம்,புத்தாடை மற்றும் சிக்கன் பிரியாணி, குளிரைப் போக்க போர்வை வழங்கிய இளைஞர்


நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தமிழன் இறையன்பு என்ற அறக்கட்டளை சார்பில் சாலை ஓரம் வசிக்கும் ஏழை எளியவர்கள் வீடேற்ற ஆதரவற்றோருக்கு  பசியாற்றி உணவு வழங்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.

 இந்த நிலையில் நேற்று தீபாவளி பண்டிகையொட்டி வேளாங்கண்ணி பேருந்து நிலையம், நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம், திருமருகல் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் வசிக்கும் ஆதரவற்றோர் மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் ஏழை எளிய மக்களுக்கு தீபாவளி பலகாரம், புத்தாடை,  சிக்கன் பிரியாணி மற்றும் கடும் குளிரைப் போக்க போர்வை உள்ளிட்டவைகளை நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இறையன்பு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் செந்தமிழன் வழங்கினார் இந்த இளைஞருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவிக்கின்றனர், இதில் நிர்வாகிகள் சுரேஷ் பாபு, ஆரோக்கிய ராஜ், சிவநேசன், ஜெயமணி, ரகுபதி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments