மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர், திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் உள்ள உய்யகொண்டான் வாய்க்காலிலும் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த தண்ணீர் செல்லும் சிறுகாடு பகுதியில் உள்ள வாழை தோட்டத்துக்கான வடிகால் வாய்க்காலில் சுமார் 7 அடி நீளமுள்ள முதலை ஒன்று சுற்றித்திரிந்தது. இதை கண்ட விவசாயிகள் அச்சம் அடைந்து பெட்டவாய்த்தலை போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் முதலையை உயிருடன் பிடித்தனர். பின்னர் அந்த முதலையை கொள்ளிடம் ஆற்றில் விட்டனர். தொடர்ந்து அந்த முதலை ஆற்றில் வேகமாக நீந்தி சென்றது. அந்த முதலை மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரில் அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

0 Comments