மீஞ்சூர் அருகே வெள்ளிவாயில்சாவடி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது


திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெளிவயல்சாவடி, மேலூர் ஆகிய ஊராட்சிகளுக்கு  இரண்டாம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்  வெள்ளிவாயல்சாவடி பகுதியில் உள்ள  அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  குணசேகரன், ஆகியோர் தலைமை தாங்கினர். உட்பட்ட வெளிவயல்சாவடி ஊராட்சி செயலர் சுதாகர் மேலூர் ஊராட்சி செயலர் இளஞ்சூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் மகளிா் உரிமைத் தொகை, முதியோா் உதவித் தொகை,பிறப்புச் சான்றிதழ்,பட்டா பெயா் மாற்றம் உள்ளிட்ட 15 துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான அரசாணையினை பயனாளிகளுக்கு வழங்கினர்.இதில்  திமுக நிர்வாகிகள்  யுவராஜ்  ஜெயப்பிரகாஷ்.கலைவாணன் சோமசுந்தரம் காங்கிரஸ் ஜெயசீலன் சமூக ஆர்வலர் மெய்யழகன் உள்ளிட்ட நிர்வாகிகள்,அரசு அதிகாரிகள்,மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments