தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்ததில் அது வெறும் புரளி என தெரியவந்தது.
இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் தேமுதிக அலுலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறிவிட்டுஅலைபேசி தொடர்பைத் துண்டித்துவிட்டார். இதையடுத்து உடனடியாக வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலின்பேரில் விரைந்து சென்ற வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் அங்கு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 550 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் சென்னை மட்டும் அதிக அளவில் வெடிகுண்டு மிரட்டல்களை சந்தித்துள்ளது. இதற்கு சர்வதேச போலீஸ் மூலம் சட்டப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைக்கவும் உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
0 Comments