திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட காரணி புதுப்பாளையம், எருக்குவாய்,மங்கலம் ஆகிய நான்கு கிராம ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று ஆரணி தனியார் திருமண மண்டபத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்த மன்னன் தலைமையில் வட்டாட்சியர் கே சுரேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி. ஜே கோவிந்தராஜன் மற்றும் ஒன்றிய செயலாளர் வே.ஆனந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை பிறப்பு சான்றிதழ் பட்டா பெயர் மாற்றம் உட்பட 310 க்கும் மேற்பட்ட கோறிக்கை மனுக்களை துறைவாரியாக ஆய்வு செய்து நல திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மங்களம் ஜே.சுரேஷ் காரணி ஜெகநாதன் மற்றும் புதுப்பாளையம் எம்.தேவராஜன் பி.கே பாபு மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் சிவசங்கர்,முரளி, சத்தியமூர்த்தி, சொக்கலிங்கம், மற்றும் வழக்கறிஞர்கள் கே.கோதண்டன் எம்.ஆர் ஸ்ரீதர்,ஜார்ஜ் மங்களம் கே. வெங்கடேசன் மற்றும் திமுகவை சேர்ந்த ஒன்றியம் நகரம் மாவட்டம் கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் மற்றும் துறை வாரியான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
0 Comments