ஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் நகராட்சி எதிர்கட்சி தலைவரும், கோபிசெட்டிபாளையம் அதிமுக நகர செயலாளர் பிரினியே கணேஷ் முன்னிலையில் கோபிசெட்டிபாளையம் தேமுதிக நகர செயலாளர் மணிகண்டன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது வார்டு கிளை செயலாளர் சக்தி கணேஷ் , ஆறாவது வார்டு கிளை செயலாளர் பெரியசாமி , ஏழாவது வார்டு கிளை செயலாளர் அனு நாகராஜ் , 23 வது வார்டு கிளை செயலாளர் சையது யூசுப் , ஆறாவது வார்டு சந்திரசேகரன் , பதினாறாவது வார்டு கிளை செயலாளரும் , கோபி நகர மன்ற உறுப்பினர் நாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர். இந்த நிகழ்ச்சி 20 வது வார்டு என்.கே.ஈஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 , 6382211592 .
0 Comments