ஈரோடு மாவட்டம், அந்தியூர் போக்குவரத்து காவல் துறை சார்பில் அந்தியூர் ஆலம்பாளையம் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சாலை விதிமுறைகள் பற்றியும் தீபாவளி பண்டிகையின் பொழுது பட்டாசு விபத்துகளில் இருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது நீர் நிலைகளுக்கு எல்லாம் செல்லக்கூடாது. என்பது பற்றியும் அந்தியூர் போக்குவரத்து காவல்துறை காவல் ஆய்வாளர் கஸ்தூரி விழிப்புணர்வு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மாணவிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
0 Comments