தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் விளக்கு பகுதியில் அகில இந்திய சட்ட உரிமை கழகத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ராஜகுமார பாண்டியனின் பிறந்த நாளை முன்னிட்டு கழக உறுப்பினர்கள் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கி சிறப்பு அன்னதான நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பிரசன்ன பிரபு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கழக நிறுவன துணைத் தலைவர் வழக்கறிஞர் ஜெகதீஸ்வரர் பாண்டியன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக கண்டமனூர் விளக்கு பகுதிக்கு வந்த நிறுவன தலைவர் ராஜகுமார பாண்டியனுக்கு மேளதாளம் முழங்க, வெடி வெடித்து வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அதனை தொடர்ந்து கழக நிர்வாகிகள் நிறுவனத் தலைவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். அதனையடுத்து கண்டமனூர் சாலையில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் கிடாவெட்டி, பொதுமக்களுக்கு அசைவு உணவு பரிமாறப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் மணி என்ற பரமத்தேவர், உதயகுமார், சுப்பிரமணியன், தேனி பிரபு ,பிரசாத் ,பூவேஸ் கண்ணன், பாண்டி ,லட்சுமணன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
0 Comments