கும்மிடிப்பூண்டியில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் சார்பில் ஆயுத பூஜை விழா..... முன்னாள் எம்எல்ஏ பங்கேற்பு


கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் உள்ள ஷேர் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. இதில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் ஆயுதப்பூஜை விழா கொண்டாடப் பட்டது. இதனையடுத்து அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் ஷேர் ஆட்டோக்கள் தூய்மைப்படுத்தப்பட்டு சந்தனம் மஞ்சள் குங்குமப்பூசி மாலை அணிவித்து வாழைக்கன்று தோரணம் பலுன்கள் கட்டி அலங்கரிக்கப் பட்டிருந்தது.

 பின்னர் அங்குள்ள ஆட்டோ சங்கப் பெயர் பலகை அருகில் பந்தல் அமைக்கப்பட்டு வாழை இலையில் பொறி கடலை வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது இதில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே எஸ் விஜயகுமார் கலந்து கொண்டு ஆயுத பூஜை விழாவை அடுத்து சிறப்பு பூஜையை நடத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு, பொரிகடலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அதிமுகவை தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் இமயம் மனோஜ்,  மாவட்ட துணை செயலாளர் சியாமளா தன்ராஜ், நகர  நகர முன்னாள் செயலாளர் மு. க. சேகர், எம் எஸ் எஸ் சரவணன் ஓடை ராஜேந்திரன் மஜித் பாய் எம். ஏ. மோகன். விஸ்வநாதன். ரஜினி .மற்றும் மகளிர் அணி சுசீலா விஜயா ஷேர் ஆட்டோ சங்க நிர்வாகிகள்  தலைவர் துணைத் தலைவர்கள் நிர்வாகிகள்.அதிமுகவினர் பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அலங்கரிக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்ட ஆட்டோக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்வலம் சென்றனர் .



Post a Comment

0 Comments