கும்மிடிப்பூண்டியில் திமுக ஒன்றிய,நிர்வாகிகள் பேரூர் வார்டு நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்


திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் மற்றும் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி திமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபங்களில் நடைபெற்றது. ஒன்றிய,நகர கழக நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்தும் கட்சி வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு குறித்தும் நிறைகுறைகள் குறித்தும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ்,கும்மிடிப்பூண்டி தொகுதி பார்வையாளர் கவி கணேசன்,கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வழக்கறிஞர் அன்பு வாணன், மாவட்ட அவைத் தலைவர் பகலவன்,மாவட்ட துணை செயலாளர் கே.வி.ஜி உமா மகேஸ்வரி,பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன் பாஸ்கர் ஆகியோர் கொண்ட மாநில மாவட்ட நிர்வாகிகளுக்கான குழுவினர் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தனர்.

 கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நா. பரிமளம்,கும்மிடிப்பூண்டி பேரூர் கழக செயலாளர் அறிவழகன் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது நிர்வாகிகளுக்கு மினிட் கையேடு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் கருணாகரன் கிருஷ்ணன் முனியாண்டி. கோபி ஹேமா குமார் முருகேசன் மற்றும்.கழக மாநில,மாவட்ட ஒன்றிய,நகர பிற அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments