கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டம்.... மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் பங்கேற்பு.....


பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் கலந்து கொண்டு பேசினார்.

கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சீனித்துரை தலைமை வகித்தார். யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை, மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் அருள் வரவேற்றார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு,  தென்காசி மாவட்டம் வருகை தரவுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு குறித்து ஆலோசனை வழங்கி பேசினார்.

இக்கூட்டத்தில் தென்காசி தொகுதி பார்வையாளர் டாக்டர் கலைகதிரவன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் அன்பரசன், மாவட்ட துணை செயலாளர் கென்னடி, கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் பொன்செல்வன், அறங்காவலர் குழு உறுப்பினர் காலசாமி, உதயநிதி; ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட துணை செயலாளர் வைரசாமி, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் தர்மராஜ், ராஜேஸ்வரி, ஊராட்சி தலைவர் ராஜ்குமார், நிர்வாகிகள் வைத்தீஸ்வரி, கபில் தேவதாஸ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், பாகமுகவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments