ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரியில் கலைத்திருவிழா..... யூனியன் சேர்மன் பரிசு வழங்கினார்.....


ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை பரிசு வழங்கி பாராட்டினார்.

ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் உயர் கல்வித்துறை சார்பில் "கலையால் கல்வி செய்வோம்" கல்லூரி கலைத் திருவிழா கடந்த செப்டம்பர் 19ந்தேதி முதல் அக்டோபர் 10ந்தேதி வரை நடைபெற்றது. இதில் பேச்சு, சொல் இசை, குழு நடனம், அலங்கார வடிமைப்பு, நாலுவிஷயம் பேசுவோம், நல்லதே பேசுபோம், தனி பாடல், தற்காப்பு கலை உள்ளிட்ட 32 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் இரா. சிவசங்கரி  தலைமை வகித்தார்.  கணினியியல் துறைத் தலைவர் முனைவர் ஞா. ஹெரன்செல்லம் வரவேற்றார்.கல்லூரி,நிதியாளர் நா.சரவணன் அறிமுக உரையாற்றினார்.

கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ.காவேரி சீனித்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார். இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ், மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் வணிகவியல் துறைத் தலைவர், முனைவர் பாலசந்தர் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments