பிக் பாஸ் செட்டை உடனடியாக மூட அரசு உத்தரவு..... ரசிகர்கள் அதிர்ச்சி

 


பெங்களூரு தெற்கு மாவட்டம், பிடடியில் உள்ள பிரபல கன்னட ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’ படமாகும் ஸ்டுடியோ வளாகத்தை உடனடியாக மூட கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் (KSPCB) உத்தரவிட்டுள்ளது. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில், வேல்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் (ஜாலிவுட் ஸ்டுடியோஸ் & அட்வென்ச்சர்ஸ்) நிறுவனத்திற்கு எதிராக சுற்றுச்சூழல் விதிமுறைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 6ஆம் தேதி வெளியான உத்தரவில், “அந்த வளாகம் பொழுதுபோக்கு மற்றும் படப்பிடிப்பு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சுற்றுச்சூழல் சட்டங்களான நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981 ஆகியவற்றின் கீழ் தேவையான ஒப்புதல்களை பெறவில்லை” என வாரியம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அனைத்து செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதுடன், குறிப்பிட்ட காலத்திற்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மூடல் உத்தரவு, ராமநகர மாவட்ட துணை ஆணையர், பெஸ்காம் நிர்வாக இயக்குநர், மற்றும் ராமநகர தாலுகா மின்அணைய பொறியாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வுத்தரவை அமல்படுத்த, அனைத்து துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த உத்தரவை பின்பற்றத் தவறினால், சுற்றுச்சூழல் சட்டங்களின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” பல ஆண்டுகளாக பிடடியில் உள்ள தனிப்பயனாக்கப்பட்ட செட்டில் படம் பிடிக்கப்பட்டு வருகின்ற ‘பிக் பாஸ் கன்னட’ நிகழ்ச்சி, நடிகர் கிச்சா சுதீப்பால் தொகுத்து வழங்கப்படுகிறது. மாநிலத்தின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments