தேனி ஊராட்சி ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி சேவை மையக் கட்டிடத்தில். கிராம சபைக் கூட்டம் ஊராட்சி செயலர் ராமு தலைமையில் நடைபெற்றது. இந்த கிராம சபைக் கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக தேனி ஊராட்சி ஒன்றிய காசாளர் நம்பீஸ்வரன், வட்டார துணை வளர்ச்சி அலுவலர் முருகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சி பொதுமக்கள், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி அலுவலகப் பணியாளர் அசோக் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவாக ஊராட்சி செயலர் ராமு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
0 Comments