ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அந்தியூர் உப கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு வழங்கும் விழாவில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் வெங்கடாசலம் கலந்துகொண்டு 30 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் , தமிழ்நாடு மின்சார வாரிய அந்தியூர் உப கோட்ட உதவி செயற்பொறியாளர் அங்கப்பன் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
0 Comments