திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி அகரம் ஊராட்சியில் தேவம்பட்டு கிராமத்தில் என்டி சி எல் சமூக பாதுகாப்பு நிதி 18 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டநியாய விலை கடையை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரைச்சந்திரசேகர் திமுக ஒன்றிய கழகச் செயலாளர் முரளிதரன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
பின்னர் குத்து விளக்கு ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி ரேஷன் பொருட்களை விநியோகம் செய்தனர் இதில் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி சிவகுமார் ஊராட்சி உதவியாளர் நாகம்மாள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர் பின்னர் தேவம்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டுமான பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார் இதில் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் பழவேற்காடு ஜெயசீலன் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
0 Comments