திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மீஞ்சூரில் வாக்கு திருட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே, பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் உள்ளிட்டோர் கையெழுத்திட்டு வாக்கு திருட்டுக்கு எதிராக பேசினர். தொடர்ந்து கூட்டத்தில் செல்வபெருந்தகை பேசுகையில், படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவருக்கும் வாக்குரிமை என அம்பேத்கர் அரசியல் சாசனத்தை இயற்றினார் எனவும், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வாக்குரிமை அனைவருக்கும் கொடுக்கப்படவில்லை என்றும், அரசை தீர்மனைக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் கட்சி மக்களிடம் கொடுத்தது என தெரிவித்தார்.
ஒருபுறம் இறந்தவருக்கு வாக்குள்ளது, மறுபுறம் உயிரோடு இருப்பவர்களுக்கு வாக்குரிமை இல்லை என்பது தான் மோடி மாடல் என சாடினார். நாடாளுமன்ற தேர்தலில் எப்படி வாக்குகளை திருடி, எப்படி வெற்றி பெற்றார்கள் என ராகுல் காந்தி எடுத்துரைத்தார் எனவும், பீர் கம்பெனியில் 600 பேர் குடியிருப்பதாக வாக்குகளை சேர்த்திருந்தார்கள் என்றும் பாஜகவின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்த ஏற்கனவே மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்திய நிலையில், தற்போது கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம் எனவும், தமிழ்நாட்டில் 1 கோடி கையெழுத்துக்களை பெற்று குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்வபெருந்தகையிடம் வாக்கு திருட்டு தொடர்பாக இந்தியா கூட்டணி சார்பில் வேறு எந்த கட்சிகளும் போராடவில்லையே என்ற கேள்விக்கு, திமுகவிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்றும், வாக்கு திருட்டை காங்கிரஸ் கட்சி மக்களிடம் முன்னெடுத்து செல்லும் நிலையில், அனைத்து கட்சிகளும் ஆதரவளித்து வருவதாக கூறினார். காமராஜர் ஆட்சி அமைப்பது குறித்த கேள்விக்கு, கட்சியை அடிமட்டத்தில் வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் தற்போது கிராமப்புறங்களில் 2லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளதாக தெரிவித்தார். ஆட்சியில் பங்கு குறித்த கேள்விக்கு, மைக் முன் நான் கோரிக்கை வைத்தால் ஆட்சியில் பங்கும், அதிக சீட்டுகளும் நீங்கள் வாங்கி கொடுப்பீர்களா என கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வினவினார். இந்த விவகாரம் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்து அறிவிக்கும் என தெரிவித்தார். கரூர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது குறித்து முழுமையாக படித்துவிட்டு அதற்கு பதிலளிப்பதாக செல்வபெருந்தகை தெரிவித்தார்.
பொன்னேரி தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு கேட்பீர்களா என்ற கேள்விக்கு, தற்போதைய எம்எல்ஏ தான் நிரந்தர சட்டமன்ற உறுப்பினர் என பதில் அளித்தார். பாஜகவிற்கு அதிக வாக்குகள் உள்ளதே என்ற கேள்விக்கு, பாஜகவிற்கு அதிக வாக்குகள் உள்ளது என்பது வெற்று மாயை எனவும், சாதிய கட்சி தலைவர்களை கூட்டு வைத்து, அவர்களது வாக்குகளை சேர்த்து கொண்டு, பாஜக வாக்குகள் அதிகம் வாங்கியதாக மாய தோற்றம் ஏற்படுத்தி உள்ளதாக பதிலளித்தார். இந்நிகழ்ச்சியில் பொன்னேரி மீஞ்சூர். கும்மிடிப்பூண்டி ஆரணி காங்கிரஸ் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பெண்கள் கலந்து கொண்டனர்.
0 Comments