ஈரோடு மாவட்ட இரத்ததான ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமைப்பிற்க்கு சிறந்த சமூகசேவை விருது


சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் இரத்ததானம் வழங்குவதில் சிறப்பாக செயல்படும் அமைப்பான ஈரோடு மாவட்ட இரத்ததான ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமைப்பிற்கு விருது வழங்கப்பட்டது.

விழாவில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர்  மா.சுப்ரமணியம்  கலந்து கொண்டு ஈரோடு மாவட்ட இரத்ததானம் ஒருங்கிணைப்பாளர் கூட்டமைப்பிற்கு விருது வழங்கி சிறப்பித்தார்.இந்த விருதினை கார்த்திகேயன் மற்றும் கவியரசு இருவரும் பெற்றுக் கொண்டனர்.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

Post a Comment

0 Comments