அமைச்சர் துரைமுருகனுடன் எம்எல்ஏ வேல்முருகன் சட்டசபையில் வாக்குவாதம்

 


தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பண்ருட்டி தொகுதி உறுப்பினர் தி.வேல்முருகன் பேசினார். அவர் பேசும்போது, "அந்தியூர் பவானி ஒரு பகுதி மக்களுக்கு விவசாயம் செய்ய நீர் கிடைக்கவில்லை. அதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

அதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "அந்தியூர் பிரச்சினையை பற்றி பேச அந்த தொகுதி உறுப்பினர் இருக்கிறார்" என்று பதில் அளித்தார்.

அமைச்சர் துரைமுருகன் இவ்வாறு கூறியதால் கடும் கோபம் அடைந்த வேல்முருகன், அவருடைய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், சபாநாயகர் அப்பாவு, அவருக்கு தொடர்ந்து பேச அனுமதி அளிக்கவில்லை. இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரான வேல்முருகன் தற்போது தி.மு.க. கூட்டணியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments