கோவையில் இருந்து ஆமதாபாத்துக்கு இண்டிகோ நேரடி விமான சேவை

 


கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கோவா, புனே, மும்பை, டெல்லி ஆகிய பகுதிகளுக்கு நேரடி விமான போக்குவரத்து உள்ளது. ஆமதாபாத்துக்கு நேரடி விமான போக்குவரத்து இல்லாத நிலை இருந்தது.

இந்தநிலையில் கோவையில் இருந்து ஆமதாபாத்துக்கு இண்டிகோ நிறுவனம் வருகிற 26-ந் தேதி முதல் நேரடி விமானத்தை இயக்க உள்ளது. கொழும்புவுக்கும் விரைவில் விமானம் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கொங்கு குளோபல் பாரம் அமைப்பு உள்ளிட்ட தொழில் அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்னர். கோவையில் இருந்து கத்தாரில் உள்ள தோஹாவுக்கு நேரடி விமானத்தை இயக்க வேண்டும் என்றும், இதன் மூலம் கோவையில் இருந்து ஏற்றுமதி பெருகும் என்றும் தொழில் அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

Post a Comment

0 Comments