ஆர்.எஸ்.எஸ். என்பது தீமையை எதிர்த்து உண்மையை நிலைநாட்டிய இயக்கம் - பிரதமர் மோடி



 ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் இன்று துவங்குகிறது. டெல்லியில் நடக்கும் இந்த கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்று, சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:-

“பொய்க்கு எதிரான உண்மை; அநீதிக்கு எதிரான நீதி; இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றி நாள். நாளை விஜயதசமி பண்டிகை; தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெற்ற நாள்.

100 ஆண்டுகளுக்கு முன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவானது தற்செயல் நிகழ்வு அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு பாரம்பரியத்தின் மறுமலர்ச்சி இது.

நானும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வேராக கொண்டவன் தான். ஆர்.எஸ்.எஸ். என்பது தீமையை எதிர்த்து உண்மையை நிலைநாட்டிய இயக்கம். ஆர்.எஸ்.எஸ். நாட்டுக்கு பல சேவைகளை செய்துள்ளது”

என பேசினார்.

Post a Comment

0 Comments