‘யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026’..... ஜேபி நட்டா வெளியீடு

 


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் இன்று (ஏப்ரல் 14) பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மத்திய அமைச்சரும், முன்னாள் தேசிய தலைவருமான ஜேபி நட்டா புதிய ‘யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026’ என்ற பெயரில் தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டு பேசினார்.

பாஜக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

*அனைத்து குடும்பத் தலைமை பெண்களுக்கு மாதம் ரூ.2,000

*ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருமுறை ரூ.10,000 உதவித்தொகை

*பொங்கல், தமிழ் புத்தாண்டு, தீபாவளி என ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்.

*Zero FIR, CCTV கண்காணிப்பு வசதிகள் செய்யப்படும்

*விரைவு நீதிமன்றங்கள் உருவாக்கப்படும்

*தைப்பூசம் மாநில விழாவாக அறிவிக்கப்படும்

*திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் வழக்கம் மீண்டும் தொடங்கப்படும்

*பெண்கள் இரு சக்கர மின் வாகனம் வாங்க ரூ. 25,000 மானியம் வழங்கப்படும்.

*போதைப் பொருள் ஒழிப்பு தமிழ்நாட்டில் 10 நகரங்கள் Top 100 clean cities இடம்பெறும்

*மூத்த குடிமக்களுக்கு வீட்டிற்கே சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments