ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் உள்ள கல்லூரியில் கமுதி அருகேயுள்ள கே.வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த ஹரிராமச்சந்திரன் மகன் முத்துராமலிங்கம் (18) இருளாண்டி மகன் சிவமணிகண்டன் (18) இவர்கள் இளநிலை முதலாம்ஆண்டு படித்து வருகின்றனர்.
இவர்களுக்கும் அதே கல்லூரியில் படிக்கும் திருமூர்த்திக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகின்றது இந்த நிலையில் திருமூர்த்தியின் நண்பர்களான வீரணன் மகன் முத்துக்குமார் (20) திருப்பதி மகன் முகேஷ் கண்ணன் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் கல்லூரிக்குள் புகுந்து முத்துராமலிங்கம் சிவமணிகண்டன் ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிஓடியது இதில் காயமடைந்த முத்துராமலிங்கம் சிவமணிகண்டன் ஆகியோர் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இதுகுறித்து கமுதி போலீசார் முத்துக்குமார் முகேஷ் கண்ணன் உள்பட 5 பேர் மீது கொலைமுயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்

0 Comments