கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பூண்டி வி.சுதாகர் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்



தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல்  தொடங்கி 6-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக வி.சுதாகரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவித்தார்.இந்த நிலையில் இன்று கும்மிடிப்பூண்டியில் வேட்பாளர் சுதாகர் ஊர்வலமாக சென்று கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.



தொடர்ந்து  உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இதில் மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார், பாமக மாவட்ட செயலாளர் பிரகாஷ், பாஜக மாவட்ட தலைவர் சுந்தரம், ஷாமிலா தன்ராஜ்.ஒன்றிய செயலாளர்கள். எஸ் எம் ஸ்ரீதர் பல்லவாடா ரமேஷ் குமார். டி.சி மகேந்திரன் கே எம் எஸ் சிவகுமார்.எல்லாபுரம் ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ். கோதண்டம். பூண்டி ஒன்றிய செயலாளர்கள் பிரசாத் மற்றும் வெங்கட்ராமன். எம் எஸ் எஸ் சரவணன். மணிகண்டன் மனோஜ்.மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள்.உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.



Post a Comment

0 Comments