திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் வி.சுதாகர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் ஏளாவூரில் உள்ள பாலாஜி. தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி ஒன்றிய கழக செயலாளர்கள் எஸ் எம் ஸ்ரீதர், டி சி மகேந்திரன், ஜெ. ரமேஷ் குமார் ,நகர செயலாளர் எஸ் டி டி ரவி முன்னிலை நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டியில் வெற்றி வேட்பாளர் சுதாகர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் எனவும் அதிமுகவின் கடந்த 10 ஆண்டுகள் சாதனைகளை எடுத்துக் கூறியும் வாக்கு சேகரித்தனர்.
இதில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளரும் சென்னை மண்டல ஐடிவிங் செயலாளர் வினோத்குமார் மாவட்ட நிர்வாகிகள் இமய ம்.மனோஜ்.சேதுபதி. எம் எஸ் எஸ் சரவணன். தன்ராஜ் கோபி. ஏழுமலை.சரவணன்.ஈக்குவார்பாளையம் முன்னாள் துணை தலைவர் எபினேசர். சுண்ணாம்பு குளம் ரமேஷ். எல்லாபுரம் பூண்டி ஒன்றிய நிர்வாகிகள். தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் செயலாளர்கள் மகளிரணி.உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




0 Comments