தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026யை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை 234 தொகுதிகளிலும் நிறுத்தி வருகின்றனர்.அதிமுக கூட்டணி,நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது தேசிய கட்சியான பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் கட்சியான பிரகாஷ் அம்பேத்கர் தலைமையில் இயங்கும் இந்திய குடியரசு கட்சி சார்பில் தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி தனித்துப் போட்டியிடும் இந்திய குடியரசு கட்சி சார்பில் ஏழு வேட்பாளர்களை முதல் கட்டமாக அறிமுகப்படுத்தி உள்ளனர்.
பொன்னேரி சட்டமன்ற தனி தொகுதிக்கு வழக்கறிஞர் பெரவள்ளூர் வ.செ.ராஜா,சோளிங்கர் தொகுதிக்கு எஸ்.செந்தில்குமார்,ராணிப்பேட்டை தொகுதிக்கு எஸ்.இளையராஜா,திருத்தணி தொகுதிக்கு என்.ரஞ்சித்குமார்,ஆற்காடு தொகுதிக்கு வி.காந்தி,திருவண்ணாமலை மாவட்டம்,செய்யார் தொகுதிக்கு எம்.துருகன்,காட்பாடி தொகுதிக்கு ஏ. பீம்ராவ் மிலிந்தர் ஆகியோர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.
இதற்கான அறிவிப்பினை இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் இரா.அன்புவேந்தன் பொன்னேரியில் வெளியிட்டார்.
பின்னர் அவர் பேசும்போது அண்ணல் அம்பேத்கர் வகுத்த அரசியல் அமைப்பு சட்டத்தின் படி ஆட்சி அமைப்பதற்கான வழிமுறைகளோடு செயல்படும் இந்திய குடியரசு கட்சி தனது அதிக பெரும்பான்மையை காண்பிக்கும் நிர்பந்தத்தில் உள்ளதால் இந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து களம் காண்கிறது என்றார்.
பொன்னேரி சட்டமன்ற (தனி) தொகுதியில் போட்டியிடும் பொன்னேரி கிரிமினல் அட்வகேட்ஸ் பார் அசோசியேஷன் சங்கத்தின் தலைவரும், வழக்கறிஞருமான பெரவள்ளூர் வ.செ.ராஜா முதல் வேட்பாளராக களம் காண்கிறார். அதே போன்று மற்ற தொகுதிகளிலும் சிறப்பான வேட்பாளர்களை களம் நிறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பின்போது இந்திய குடியரசு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சின்னக்காவணம் தன்ராஜ், பொருளாளர் சத்தியசீலன்,இணைச் செயலாளர் செந்தில்குமார்,தலைமை நிலைய செயலாளர் கல்பனா,துணை செயலாளர் உதயசூரியன்,திருவள்ளூர் மாவட்ட தலைவர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

0 Comments