சோழவரம்: திமுக பிரமுகருக்கு ஆதரவாக ஒருதலை பட்சமாக செயல்படும் காவல்துறையினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதம்


திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஆத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் இவர் அதே பகுதியில் பூர்வீக சொத்து வைத்திருந்த நிலையில் அதனை தவறான ஆவணங்கள் பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகவும் இது குறித்து அவர் நீதிமன்றத்தை அணுகி இருப்பதாகவும் இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் திமுக பிரமுகர்களான முத்து நாயுடு, ரமேஷ் சவுத்ரி அவர்களின் தூண்டுதலின் பேரில் நாராயணசாமி என்பவர் தாக்கப்பட்டதாகவும் இந்த நிலையில் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதற்கு சீனிவாசன் என்பவர் தான் காரணம் என சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.



 இந்த நிலையில் நேற்று சீனிவாசன் வீட்டுக்கு சென்ற போலீசார் அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண்களிடம் தாகத வார்த்தைகளை பயன்படுத்தி வாக்குவாதத்தில்   ஈடுபட்ட நிலையில் பெண்களை வலுக்கட்டாயமாக காவல் நிலையம் அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது இந்த அநாகரீகமான செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் இன்று அங்கு வந்த காவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செங்குன்றம் உதவி ஆணையர் பாதிக்கப்பட்டவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Post a Comment

0 Comments