கமுதி பகுதியில் அதிமுக வேட்பாளர் மலேசியா எஸ்.பாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பு

 


ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஒன்றியம் பம்மனேந்தல் கிராமத்தில் அதிமுக வேட்பாளர் மலேசியா எஸ். பாண்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். அங்குள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து கிராமத்தில் பொதுமக்களை சந்தித்த அவர், வரவிருக்கும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

பின்னர் பொதுமக்களிடம் பேசிய மலேசியா எஸ். பாண்டி, “மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, கழிவுநீர் வடிகால் அமைப்பு, தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான திட்டங்களை கொண்டு வர முயற்சி செய்யப்படும்” என்று உறுதியளித்தார்.

இந்த பிரச்சாரத்தின் போது அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர். கிராம மக்கள் மலேசியா எஸ். பாண்டியை உற்சாகமாக வரவேற்று தங்களது கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

Post a Comment

0 Comments