திமுகவின் சைடு டிஷ் திருமாவளவன்..... நடிகை விந்தியா விமர்சனம்

 


அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான விந்தியா திண்டிவனத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

விசிக தலைவர் திருமாவளவன் தன்னுடைய கட்சி தொண்டர் குடித்து விட்டு வந்தார் என்பதற்காக கன்னத்தில் அறைந்துள்ளார். திருமாவளவன் அறையவேண்டியது குடித்துவிட்டு வந்தவரையா, குடிக்க வைத்தவரையா, இல்லை தெருவுக்கு தெரு டாஸ்மாக்குகள், கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருபவர்களை என்ன செய்ய போகிறார். குடிபோதையில் இருப்பவனை அடிப்பது எளிது. ஆனால், அதிகார போதையில் இருக்கும் மு.க.ஸ்டாலினையும் பிரேமலதாவையும் என்று அறைய போகிறார், என்று கூற வேண்டும். சபாநாயகர் அப்பாவு அவருடைய தொகுதியில் உள்ள விசிகவின் சுவரொட்டிகளை எல்லாம் கிழித்தும், விசிகவின் சின்னத்தை அழித்தும் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். ஜாதி ஓட்டுகள் போய்விடக்கூடாது என்பதற்காக அப்பாவு இவ்வாறு செய்து வருகிறார். அவரை திருமா எப்போது அறைய போகிறார்.திமுக கூட்டணியில் புதிதாக இணைந்த தேமுதிகவுக்கு 10 சீட், நீண்ட நாட்களாக இருக்கும் விசிகவுக்கு 8 சீட் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரே போன் காலில் நீங்கள் போட்டியிடுவதை தடுத்து நிறுத்தியவரை என்ன செய்ய போகிறார். திமுக கூட்டணியில் திருமாவளவனை சைடு டிஷ் ஆக பயன்படுத்தி வருகின்றனர். திருமா தமிழ்நாட்டில் அரசியல் செய்து வருகிறாரா, இல்லை அடிமையாக வாழ்கிறாரா என உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஏன் இந்த அடிமைத்தனம் என்று திருமாவிடம் கேட்டால் இடதுசாரி, வலதுசாரி என ஆயிரம் காரணங்களை சொல்லி வருகிறார்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Post a Comment

0 Comments