நாகப்பட்டினம்: கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக கழகம் வேளாங்கண்ணியில் பேரூர் தேர்தல் பணிமனை திறப்பு மற்றும் செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது



நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றியம் திமுக கழகம்  வேளாங்கண்ணி பேரூர் தேர்தல் பணிமனையில் 2026 சட்டமன்றத் தேர்தல் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கீழ்வேளூர் (தனி)சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் டி. லதாவை ஆதரித்து கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன்  தலைமையில் செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு   கூட்டணியின்  நிர்வாகிகள் கிளை செயலாளர்கள் அனைவருக்கும் வேட்பாளர் டி.லதா பொன்னாடை போற்றினார், அதனைத் தொடர்ந்து  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக நாகை மாவட்ட செயலாளர் என். கௌதமன், கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி நாகை மாலி, சிபிஎம் மாவட்ட செயலாளர் மாரிமுத்து போன்றவர்கள் வேட்பாளர் டி. லதாவை ஆதரித்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரத்திற்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என உரையாற்றினர் அனைத்து பொறுப்பாளர்களும் கூட்டணிக் கட்சி தோழர்களும் வெற்றி பெற செய்வோம் என்று உறுதி அளித்தனர். 



வேளாங்கண்ணி செய்தியாளர் எல்.கலைச்செல்வம்




Post a Comment

0 Comments