திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மேட்டு காலனியில் உள்ள திறப்பின் சுவிசேஷ திருச்சபை சார்பாக போதகர் ஜேக்கப் தலைமையில் மேட்டு காலனியில் தொடங்கி கும்மிடிப்பூண்டி பஜார் வீதிகள் வரை ஊர்வலம் நடைபெற்றது.
இயேசு கிறிஸ்துவின் வாழ்நாளில் மிக முக்கியமான நாளாக கருதப்படும் புனித வெள்ளியில் இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கியதை விளக்கும் விதமாக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்தது போல் தத்ரூப உருவ நாடகத்துடன் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்ட சபை உறுப்பினர்களும், சபையின் மூப்பர்கள் போவாஸ், ஐசக் சகரியா, எலேசியர், ஜெயசீலன், தாமஸ் மற்றும் டி.கண்ணன், ஜே.அரவிந்த், டி.மணி, விஜயன், சௌந்தர், அச்சுதன், சஞ்சய், அனீஸ், தருண் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அதேபோல் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட திருச்சபைகளின் சார்பாக புனித வெள்ளி ஊர்வலம் நடத்தப்பட்டது.


0 Comments