நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் வடிவேல் ராவணன் அதிமுக கூட்டணி வேட்பாளர் மாம்பழ சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு அக்கரைப்பேட்டை கிராமம் கீச்சாங்குப்பம் கல்லார் கிராமங்களுக்கு சென்று அந்தந்த ஊர் பஞ்சாயத்தர்களை பார்த்து அவர் ஊரில் இருக்கும் பிரச்சனைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு அவர்கள் குறைகளை கேட்டு அறிந்து அதிமுக கூட்டணி மாம்பழ சின்னத்தில் என்னை வெற்றி பெற செய்தால் உங்கள் ஊரில் அனைத்து பிரச்சனைகளையும் விரைவில் சரி செய்து தருகிறேன் என்று உறுதியளித்தார்.
அக்கரைப்பேட்டை ஊராட்சியில் நீண்ட நாட்களாக சரி செய்ய முடியாது மூன்று வாட்டர் டேங்க் உள்ளது நீங்கள் வெற்றி பெற்றால் எங்களுக்கு வாட்டர் டேங்க் கட்டித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம் அதற்கு வேட்பாளர் வடிவேல் ராவணன் நான் வெற்றி பெற்றவுடன் உங்கள் கோரிக்கை அனைத்தையும் சட்டசபையில் எடுத்துரைத்து குரல் கொடுத்து உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவேன் என்று உத்திரவாதம் கொடுத்துள்ளார் அதனைத் தொடர்ந்து அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து பின்னர் கழகத் தோழர் அனைவருக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.
நாகை செய்தியாளர் எல்.கலைச்செல்வம்




0 Comments