பீகார் முதலமைச்சராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி பதவியேற்பு



 பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல் - மந்திரியாக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் செயல்பட்டு வந்தார். நிதிஷ்குமார் கடந்த 21 ஆண்டுகளாக பீகார் முதல்-மந்திரியாக செயல்பட்டு வந்தார்.இதனிடையே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக பணியாற்ற வேண்டும் என்ற நீண்டகால விருப்பத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து, கடந்த 17ம் தேதி நடைபெற்ற தேர்தலில், மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வானார். 

எம்.பி.யாக தேர்வானத்தை தொடர்ந்து பீகார் முதல்-மந்திரி பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். முதல்-மந்திரி பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்ததையடுத்து புதிய முதல்-மந்திரி யார்? என்ற கேள்வி எழுந்தது.இதையடுத்து, புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வது குறித்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகார் புதிய முதல்-மந்திரியாக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அவருக்கு ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு அளித்தனர்.இந்நிலையில், பீகார் முதல்-மந்திரியாக சாம்ராட் சவுத்ரி இன்று பதவியேற்றுக்கொண்டார். பாட்னாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் சயது ஹசானி, சாம்ராட் சவுத்ரி பதவியேற்பு பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பீகார் முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள சாம்ராட் சவுத்ரிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments