கரூர் மாதிரி சென்னையிலும் பிரச்சனையை உருவாக்க சென்னை போலீஸ் கமிஷனர் முயற்சி..... ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு

 


நடிகர் விஜய் கலந்து கொண்ட கரூர் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் அதே மாதிரியான பிரச்சினையை சென்னையில் உருவாக்க கமிஷனர் அருண் முயற்சிக்கிறார் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இன்று (ஏப்ரல் 6) தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம், தியாகராய நகர் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய அக்கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காகத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் அனுமதி கோரி விண்ணப்பித்தனர். விஜய் பிரச்சாரத்திற்கு நேற்று இரவு காவல்துறை அனுமதி வழங்கியது.இதில் வில்லிவாக்கம் தொகுதியில் காலை 12 மணி முதல் 1 மணிக்குள் பிரச்சாரம் செய்து முடிக்கவும், தியாகராய நகர் தொகுதியில் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை பிரச்சாரம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், விஜய் கேட்ட நேரத்தில் காவல்துறை அனுமதி வழங்காததால் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதாகக் கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதம் அர்ஜுனா, “சென்னை காவல் ஆணையர் மாற்றப்பட்டால் தான் தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறும்” என்று தெரிவித்தார். மேலும் தியாகராய நகரில் 2 மணி முதல் 6 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டிருந்தோம். உடனடியாகத் தேர்தல் அதிகாரி 2 மணி முதல் 6 மணி வரை அனுமதி வழங்கினார். ஒரு மணி நேரத்தில் அந்த ஆர்டர் ரத்து செய்யப்பட்டு, 2 மணி முதல் 3 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

கரூர் மாதிரியான பிரச்சினையை சென்னையில் உருவாக்க கமிஷனர் அருண் முயற்சிக்கிறார்” என்று பகிரங்கமாகக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.மேலும் சென்னையில் விஜய் பிரச்சாரம் செய்ய முடியாத அளவிற்கு திமுக அழுத்தம் கொடுக்கிறது. டெல்லியிலும் போய் முறையிட உள்ளோம்” என்றும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments