நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர் கூட்டம் குறிச்சி ஊராட்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை தெற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையில் பதினாறு ஊராட்சிகள் ஊராட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் அந்தந்த ஊர்களில் உள்ள அடிப்படை வசதிகளை செய்து தருமாறு ஒன்றிய செயலாளர் எடுத்து வைத்தார் நமது வேட்பாளர் வடிவேல் ராவணனை வெற்றி பெறச் செய்தால் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் இருக்கும் அடிப்படை வசதிகளை நமது வேட்பாளர் செய்து தருவார் என்று கூறியுள்ளார்.
அதற்கு வேட்பாளர் வடிவேல் ராவணன் என்னை வெற்றி பெற செய்தால் உங்கள் ஊரில் உள்ள அனைத்தும் சரி செய்து தருகிறேன் கூறியுள்ளார் அதற்கு உங்களை கண்டிப்பாக வெற்றி பெற செய்கிறோம் என்று கழகத் தோழர்களும் கழகப் பொறுப்பாளர்கள் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் உறுதியளித்தனர் பின்னர் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
நாகை செய்தியாளர் லெ.கலைச்செல்வம்





0 Comments