முதுகுளத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் வராமல் இருந்தால் சரி..... பசும்பொன்னில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி.....

 


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அவரது திருவுருவ சிலைக்கு முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான.      ராஜ கண்ணப்பன், ராமநாதபுரம் வேட்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி தனி தொகுதி வேட்பாளர் கதிரவன், ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி உள்ளிட்டோர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளர் ராஜ கண்ணப்பன், கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோல ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதியிலும் திமுக  அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி நிச்சயம்பெறும் என்றார்.

எனக்கு அரசியல் குரு ராஜ கண்ணப்பன் என அவரிடம் அரசியல் கற்றுக்கொண்டதாக அதிமுக வேட்பாளர் மலேசியா பாண்டி கருத்து தெரிவித்த நிலையில் இது தொடர்பான செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த ராஜ கண்ணப்பன் தொகுதிக்கு  இடைத்தேர்தல் வராமல் இருந்தால் சரிதான் என உடனேயே புறப்பட்டு விட்டார் திமுக வேட்பாளர்                        ராஜ கண்ணப்பன் நக்கலாக பேசியது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments