தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் தீவிர வாக்கு சேகரிப்பு

 


 நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி அஇஅதிமுக கூட்டணி வேட்பாளர் வடிவேல் ராவணன் பொது மக்களிடம் மாம்பழ சின்னத்துக்கு ஆவராணி புதுச்சேரி ஆலங்குடி வடுவசேரி அதனைத் தொடர்ந்து எளிமையான முறையில் மதிய உணவு வடவச்சேரி தொடக்கப் பள்ளியில் உணவு அருந்தினார் பிற்பகல் மாலை செம்பிய மகாதேவி அகலங்கண்ணு மகதானம் ஒரத்தூர் அகர ஒரத்தூர் குறிச்சி ஊராட்சியில் கழகத் தொண்டர்கள் அனைவரும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



    ஆய்மலை ஊராட்சியில்  எங்கள் ஊரில் நீண்ட நாட்களாக குளம் தூர் வாராமல் மிகவும் மோசமான நிலைமையில்  குளம் இருக்கிறது நீங்கள் வெற்றி பெற்றால் எங்கள் ஊரில் உள்ள குளத்தை சீர் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்   அதற்கு வேட்பாளர் நீங்கள் என்னை வெற்றி பெற செய்தால் உங்கள் ஊரில் உள்ள குளத்தை எனது சொந்த செலவில் கட்டித் தருகிறேன் என்று வேட்பாளர் வடிவேல் ராவணன் அவர்கள் உறுதியளித்தார்.



  கழகப் பொறுப்பாளர்கள் கழக மகளிர் அணி தலைவிகள்  திரளாக கலந்து கொண்டு கழக கொடி கட்டிக் கொண்டு 20க்கும் மேற்பட்ட டூவீலர்கள்  வரிசையாக அணிவகுத்து வாக்கு சேகரித்தனர் கீழையூர்  சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  ஊர்களிலும்  உள்ள பொறுப்பாளர்கள் பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து சால்வை அணிவித்து மாலை அணிவித்து  கழகப் பொறுப்பாளர்களும் பொதுமக்களும் உங்களை நிச்சயமாக வெற்றி பெற செய்வோம் என்று உறுதி அளித்தனர்.

 நாகை செய்தியாளர் லெ.கலைச்செல்வம்

Post a Comment

0 Comments