சர்ச்சுக்குள் கட்சி சின்னத்துடன் சென்ற சுந்தர்.சி மீது வழக்குப்பதிவு


 மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக, கூட்டணியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளராக இயக்குனர் சுந்தர்.சி போட் டியிடுகின்றனர்.

இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன், எல்லீஸ் நகர் பகுதி கிறிஸ்தவ ஆலயத்துக்குள், இரட்டை இலை சின்னத்துடன் சென்ற சுந்தர்.சி அங்குள்ளவர்களிடம் ஆதரவு கேட்டதுடன், பிரார்த்தனையிலும் ஈடுபட்டார்.

தேர்தல் நடத்தை விதிகளின்படி, வழிபாட்டு தலங்களுக்கு வெளியேதான் வேட்பாளர் கேட்க ஆதரவு வேண்டும். அதை இயக்குனர் சுந்தர்.சி மீறியதாக திமுக வழக்கறிஞர் சுமேஷ் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுந்தர்.சி மீது எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments