கமுதி அருகே தேமுதிக தொண்டர்கள் பாஜகவில் இணைந்தனர்..... அதிமுக வேட்பாளர் மலேசியா பாண்டி வெற்றிக்கு உழைக்க சபதம்.....

 


இராமநாதபுரம் மாவட்டம், கமுதி பாப்பிரெட்டிபட்டி, டி. குமாராமரபுரம் கிராமத்தை சேர்ந்த சுமார் நூறுக்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்கள் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டனர், இணைப்பு நிகழ்சியானது  முதுகுளத்தூரில் நடைபெற்றது.

 இதில் சுந்தராஜன் அம்பலம், பாஜக தொழிற்பிரிவு மாவட்ட செயலாளர் சக்திவேல் ஏற்பாட்டில் பாஜக முதுகுளத்தூர் சட்டமன்ற அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன், சட்டமன்ற இணை அமைப்பாளர் வழக்கறிஞர் முதுவை இளையராஜா, கமுதி தெற்கு பாஜக ஒன்றிய தலைவர் வேலவன், முன்னிலையில் இணைத்து கொண்டனர் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேசியஜனநாயக கூட்டணியின் அதிமுக வேட்பாளரான , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டி வெற்றிக்கு உழைக்க சபதமேற்றனர், நிகழ்ச்சியில் ஒன்றிய பார்வையாளர் சேதுராமு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரமேஸ்குமார், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட இணை அமைப்பாளர் கவிராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments