திருவள்ளூர்: அனுப்பம்பட்டு ஊராட்சி திமுக மூத்த முன்னோடி பி.சுகுமார் 16ஆம் நாள் நினைவு அஞ்சலி முன்னிட்டு திருவுருவப்படத்தை திறந்து மலர் தூவி மரியாதை



திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றியம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அனுப்பப்பட்டு எஸ்.தேவராஜ் தந்தையும் திராவிட முன்னேற்ற கழக மூத்த முன்னோடி சுகுமாரின் 16ஆம் நாள் நினைவு அஞ்சலி மற்றும் படத்திறப்பு விழா நடைபெற்றது. 



இந்த படத்திறப்பு விழாவிற்கு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மொழிப்போர் தியாகி டாக்டர் கா.சு.ஜெகதீசன், மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் கா.சு.தமிழ்உதயன், முன்னாள் மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி ஆகியோர் கலந்து கொண்டு திருவுருவப் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செய்தனர். 



இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் இ.ரமேஷ், வி.ஜே.சேகர், வி.மோகன், எஸ்.ரகு.கருணாநிதி, ராயப்பன், மகேஷ், ஹரி, ராஜேஷ், சரவணன், ரஜினிமுருகன், எஸ்.மணிகண்டன் ரெ.மா.. சுந்தர். நாராயணன்.மற்றும் கழக உடன்பிறப்புகள் பலர் கலந்துகொண்டு திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

Post a Comment

0 Comments